இந்த ஆண்டு பெரும்போகத்துக்கு 50,000 மெற்றிக் டன் கரிம உரம் தேவைப்பட்டாலும், உர உற்பத்தி நிறுவனங்களிடம் 80,000 மெற்றிக் டன் உரம் மட்டுமே இருப்பதாக தெரியவந்துள்ளது.
கரிம உரங்களை வழங்கும் வேலைத்திட்டம் தொடர்பில் விவசாய அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர இதனை அறிவித்தார்.
பெரும்போகத்தின் போது 30 வீத சேதன உரங்களையும், 70 வீத இரசாயன உரங்களையும் பயன்படுத்தி நெல் பயிரிட விவசாயத் திணைக்களம் பரிந்துரைத்துள்ளது.
அத்துடன், இப் பருவத்துக்கான சேதன உரங்களை வழங்கும் போது எந்தவொரு நிறுவனமும் தரம் குறைந்த இயற்கை உரங்களை வழங்கினால்,அவ்வாறான நிறுவனங்களை கறுப்புப் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.