குக்குலே கங்கை நீர்த்தேக்கத்தை அண்டிய தாழ்நில பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெள்ளப்பெருக்கு நிலைமை தொடர்பில் அவதானமாக இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரித்துள்ளது.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக, குறித்த நீர்த்தேக்கத்தின் 2 வான்கதவுகள் தன்னிசை்சையாக திறந்துள்ளதால், எதிர்வரும் மணித்தியாலங்களில் வெள்ள நிலைமை குறித்து அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திடீரென திறக்கப்பட்டதாக நீர்ப்பாசன (நீரியல்) பணிப்பாளர் எஸ்.பி.சி. சுகீஸ்வர தெரிவித்தார்.
வான் கதவுகள் திறக்கப்பட்டதையடுத்து, தற்போது நீர்த்தேகத்திலிருந்து வினாடிக்கு 500 கன மீற்றர் அளவில் தண்ணீர் வெளியேறுவதாக அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில், புலத்சிங்கள, அயகம, பாலிந்தநுவர ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு நீர்ப்பாசன திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் என்பன அறிவுறுத்தியுள்ளன.