இந்த வருடம் மார்ச் மாதத்திற்குப் பின்னர் இன்று மிகக் குறைந்த தங்க விலை பதிவாகியுள்ளது.
கொழும்பு செட்டியார் வீதியில் உள்ள தங்க ஆபரணக் கடைகளின் உரிமையாளர்கள் இதனை தெரிவித்தனர்.
அதன்படி 22 கரட் தங்கம் ஒரு பவுன் விலை 157,500 ரூபாவாகவும், 24 கரட் தங்கம் ஒரு பவுன் விலை 170,000 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.