தற்போது எரிபொருட்களின் விலை குறைந்துள்ள போதிலும், உக்ரைன்-ரஷ்யா யுத்தம் காரணமாக, எதிர்வரும் டிசெம்பர் மாதத்திற்குள் எரிபொருள் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லை வோட்டர்ஸ் ஏஜ் ஹோட்டலில் நேற்று (31) பிற்பகல் நடைபெற்ற இலங்கை தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் 32 ஆவது வருடாந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.