வன்முறை மற்றும் கொலைகள் மூலம் அரசாங்கத்தை கவிழ்க்க இடமளிக்கக்கூடாது என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
போராட்டக்காரர்கள் அரசியல்வாதிகளின் வீடுகளை எரித்து மக்களை கொல்ல முயற்சித்தால் அவர்களுக்கு எதிராக அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எவ்வாறாயினும், அமைதியான போராட்டக்காரர்களின் குரல்களுக்கு செவிசாய்க்க நாங்கள் எப்போதும் தயாராகவே உள்ளோம் எனவும் அவர் தெரிவித்தார்.
நவம்பர் 2 ஆம் திகதி கொழும்பில் பாரிய போராட்டத்தை நடத்துவதற்கான பல திட்டங்கள் குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர், அமைதியான மற்றும் நியாயமான போராட்டக்காரர்களுக்கு செவிசாய்க்க அரசாங்கம் தயாராக இருந்தாலும், வன்முறை மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபட எவரையும் அனுமதிக்காது என அவர் மேலும் தெரிவித்தார்.