Saturday, September 21, 2024
28 C
Colombo
செய்திகள்உலகம்ட்விட்டரில் ப்ளூ டிக் வசதிக்கு கட்டணம்

ட்விட்டரில் ப்ளூ டிக் வசதிக்கு கட்டணம்

ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியுள்ள நிலையில் அதில் அளிக்கப்படும் சில சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிகாரப்பூர்வ கணக்குகளுக்கான ‘ப்ளூ டிக்’ வசதிக்கு இனி மாதம் இலங்கை ரூபாவில் சுமார் ரூ.7000 கட்டணமாக வசூலிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உலகம் முழுவதும் அதிகமானோரால் பயன்படுத்தப்படும் சமூக வலைதள செயலிகளில் ஒன்றான ட்விட்டர் நிறுவனத்தை உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் சமீபத்தில் வாங்கினார்.

இதனையடுத்து ட்விட்டர் தளத்தில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவர அவர் முயற்சித்து வருகிறார்.

அதன்படி, நேற்று வெளியிட்டுள்ள பதிவில், ‘டுவிட்டர் தளத்தில் வெளியிடப்படும் பதிவுகளின் நம்பகத்தன்மை, உண்மைதன்மை, தரத்தை மதிப்பீடு செய்ய, கண்காணிக்க, புதிதாக பதிவுகள் மதிப்பீட்டு குழு அமைக்கப்படும்’ என, எலான் மஸ்க் கூறியுள்ளார்.

இந்த நிலையில், பிரபலமானவர்களின் அதிகாரப்பூர்வ கணக்குகளுக்கு ‘ப்ளூ டிக்’ வசதி வழங்கப்படுகிறது.

இந்த ப்ளூ டிக் வசதிகளுக்கு இனி கட்டணம் வசூலிக்க எண்ணியுள்ளதாகவும்,அதன்படி, ‘ப்ளூ டிக்’ கணக்கு வைத்திருக்கும் பயனர்கள் இலங்கை மதிப்பில் மாதம்தோறும் ரூ.7000 கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவிக்க உள்ளனர்.

அதுபோல நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை விளம்பரப்படுத்துதல் உள்ளிட்ட வணிக ரீதியான பயன்பாடுகளுக்கும் ட்விட்டரில் சிறப்பு வசதிகளை ஏற்படுத்தி அதற்கு கட்டணம் வசூலிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles