இலங்கையில் டிஸ்னிலேன்டை உருவாக்கும் திட்டம் எதுவும் தற்போது இல்லை என வோல்ட் டிஸ்னி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் டிஸ்னிலேன்ட் ஒன்றை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அது குறித்து அந்நிறுவனத்துடன் கலந்துரையாட அமெரிக்கா செல்ல இருப்பதாகவும் இராஜாங் சுற்றுலா அமைச்சர் டயானா கமகே அண்மையில் தெரிவித்திருந்தார்.
எவ்வாறாயினும், இலங்கையில் ஒரு தீம் பார்க் திறப்பது தொடர்பாக டிஸ்னியுடன் கலந்துரையாடலை ஆரம்பித்துள்ளதாகவும், அது தொடர்பில மேலதிக தகவல்கைளை இராஜாங்க அமைச்சர் மறுத்துவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
#Newswire