பாண் ஒன்றின் விலையை இன்று (31) குறைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அகில இலங்கை பேக்கரி சங்கம் தெரிவித்துள்ளது.
இறக்குமதி செய்யப்பட்ட கோதுமை மா சந்தையில் போதுமான அளவு காணப்படுவதால், நிறைவேற்று சபை கூடி இது தொடர்பில் தீர்மானம் எடுக்கவுள்ளதாக சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன நேற்று தெரிவித்தார்.
அதன்படி இன்று (31) முதல் பாண் ஒன்றின் விலை 10 முதல் 20 ரூபா வரை குறைக்கப்படவுள்ளது.
இதேவேளை, நாளை (01) முதல் ஏராளமான உணவு வகைகளின் விலைகள் 10% குறைக்கப்படும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் நேற்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டிருந்தது.