Monday, March 23, 2026
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபூஜித்த விதானவுக்கு புதிய பதவி

பூஜித்த விதானவுக்கு புதிய பதவி

இலங்கை கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக ரியர் அத்மிரல் பூஜித்த விதான நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக செயற்பட்ட ரியர் அத்மிரல் அநுர ஏக்கநாயக்க ஓய்வு பெற்றதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்காக, ரியர் அத்மிரல் பூஜித்த விதான நியமிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த 28ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில், இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான நியமனக்கடிதத்தை, பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரட்னவினால் ரியர் அத்மிரல் பூஜித்த விதானவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles