Friday, March 27, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவிமான நிலையத்திலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட ரஞ்சன்

விமான நிலையத்திலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட ரஞ்சன்

வெளிநாடு செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த ரஞ்சன் ராமநாயக்கவை திருப்பி அனுப்ப குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அமெரிக்காவில் இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரஞ்சன் ராமநாயக்க நேற்று (27) கட்டார் எயார்வேஸ் விமானத்தில் வெளிநாடு செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கட்டுநாயக்காவில் இருந்து கட்டார் சென்று அங்கிருந்து அமெரிக்கா செல்வதே அவரது திட்டமாக இருந்தது.

எனினும், அவர் மீது நிலுவையில் உள்ள இரண்டு வழக்குகள் தொடர்பாகவும் வெளிநாடு செல்ல நீதிமன்றங்கள் தடை விதித்துள்ளதால், அவரை திருப்பி அனுப்ப குடிவரவுத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles