Tuesday, November 19, 2024
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுலேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் ஒரு பகுதி இருளில்

லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் ஒரு பகுதி இருளில்

லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் பல மாதங்களாக மின்சாரக் கட்டணம் செலுத்தப்படாமையால் வைத்தியசாலையின் ஒரு பகுதியில் மின்சாரத்தை துண்டிக்க மின்சார சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக வைத்தியசாலையின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார் .

வைத்தியசாலையின் சிற்றுண்டிச்சாலை உட்பட பல பிரிவுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் நோயாளிகள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கான 30 மில்லியன் ரூபா கட்டணத்தை செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டதன் காரணமாக முன்னறிவிப்பு இன்றி மின்சாரம் துண்டிக்கப்படுவது பாரிய அநீதி என அவர் சுட்டிக்காட்டினார்.

எனினும் மின்சாரம் துண்டிக்கப்பட்ட சில மணித்தியாலங்களின் பின்னர் 16 மில்லியன் மின்சாரக் கட்டணம் செலுத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் மின்சார கட்டணம் 8 மில்லியன் ரூபாவாக இருந்ததாகவும்இ ஆகஸ்ட் மாதத்தில் வைத்தியசாலையின் மின் கட்டணம் 13 மில்லியன் ரூபாவாக உயர்ந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles