Sunday, May 11, 2025
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநடத்துனர் இன்றி இயங்கும் பேருந்து சேவை கொழும்பில்

நடத்துனர் இன்றி இயங்கும் பேருந்து சேவை கொழும்பில்

பொது போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில் நடத்துனர் இன்றி இயங்கும் அதிநவீன பேருந்து சேவையை ஆரம்பிப்பதற்கான திட்டம் தொடர்பில் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கும் தனியார் தொழில்நுட்ப குழுவுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று அண்மையில் இடம்பெற்றது.

கொழும்பு, நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், Gaman by Trace கையடக்கத் தொலைபேசி செயலி மூலம் இந்த பொதுப் போக்குவரத்துச் சேவை அறிமுகம் செய்யப்பட்டது.

கொழும்பு கோட்டை, கொம்பனி தெரு, கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி, பொரளை, நகர மண்டபம் உட்பட கொழும்பு நகரின் பெரும்பாலான பிரதான நிலையங்களை உள்ளடக்கி இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

எவ்வளவு தூரம் இந்த பேருந்தில் பயணித்தாலும் 200 ரூபா மட்டுமே கட்டணமாக அறவிடப்படும் என்பது இதன் சிறப்பம்சமாகும்.

மொபைல் அப்ளிகேஷன் மூலம் கட்டணம் செலுத்தப்படுவதால், இந்த பேருந்துகள் நடத்துனர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles