முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பாதுகாப்பிற்காக 226 பேர் உயரடுக்கு பாதுகாப்பு பிரிவில் பணியமர்த்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எலைட் பாதுகாப்பு பிரிவில் சுமார் 6இ000 பொலிஸ் அதிகாரிகள் உள்ளனர் என்றும் இந்த 6000 பேரில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் பல விடயங்களுக்கு பொறுப்பேற்க வேண்டிய முன்னாள் ஜனாதிபதிக்கு பொலிஸ் திணைக்களத்தில் இருந்து 226 பேரும், இராணுவம் மற்றும் விசேட அதிரடிப்படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.