Tuesday, November 19, 2024
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎடை குறைந்த பாண் உற்பத்தி - பேக்கரி உரிமையாளர்கள் விளக்கம்

எடை குறைந்த பாண் உற்பத்தி – பேக்கரி உரிமையாளர்கள் விளக்கம்

கோதுமை மா மற்றும் இதர மூலப்பொருட்களின் அதிக விலை காரணமாக சில பேக்கரிகள் நிறை குறைந்த பாணை உற்பத்தி செய்வதாக அகில இலங்கை பேக்கரி சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

கோதுமை மா உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை சுமார் 300% ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலைமை காரணமாக பாண் உற்பத்தியில் இருந்து பேக்கரிகள் விலகுவதாகவும், ஏற்கனவே 2000க்கும் மேற்பட்ட பேக்கரிகள் மூடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கோதுமை மா மற்றும் ஏனைய பொருட்களின் விலை அதிகரித்துள்ள நிலையில், 400 கிராம் நிறை கொண்ட பாணை உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

அத்துடன், எடை குறைந்த பாண்களை உற்பத்தி செய்யும் பேக்கரிகளை தேடி சோதனைகளை மேற்கொள்வது அதற்குத் தீர்வாகாது என அவர் சுட்டிக்காட்டினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles