Saturday, September 20, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமருந்து தட்டுப்பாடு தொடர்பில் நாளாந்தம் ஆராயப்படும்

மருந்து தட்டுப்பாடு தொடர்பில் நாளாந்தம் ஆராயப்படும்

நாட்டிலுள்ள மருந்து தட்டுப்பாடு குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட குழு நாளாந்தம் கூடி நாட்டிலுள்ள மருந்துகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு தீர்மானித்துள்ளது.

சுகாதார அமைச்சர் தலைமையில் அமைச்சின் அதிகாரிகள், அரச மருந்துக் கூட்டுத்தாபனம், அரச மருந்து உற்பத்திக் கூட்டுத்தாபனம், மருத்துவ விநியோகப் பிரிவு மற்றும் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகார சபையினர் இந்தக் கூட்டங்களில் கலந்துகொள்வார்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், மருத்துவ வழங்கல் பிரிவு மற்றும் தொடர்புடைய நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களில் உள்ள மருந்துகள் தொடர்பில் நாளாந்த அறிக்கைகளைப் பெறவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles