நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் சட்ட நடவடிக்கைகளை எதிர்நோக்கி வரும் திலினி பிரியமாலியின் விளக்கமறியல் பிறிதொரு வழக்கு தொடர்பில் நவம்பர் 9 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
கடவத்தை பிரதேசத்தில் உள்ள தனியார் நிறுவனமொன்றில் இருந்து 5 இலட்சத்து 3200 ரூபா பெறுமதியான தொலைபேசி பாகங்கள் மற்றும் ஏனைய உதிரி பாகங்களை கொள்வனவு செய்து அதற்கு பெறுமதியான நிராகரிக்கப்பட்ட காசோலையை வழங்கியமை தொடர்பிலேயே இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கடவத்தை பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்திருந்த நிலையில், குறித்த வழக்கு இன்று கடவத்தை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.