அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து சிவில் அமைப்புகள், தொழிற்சங்கங்கள் மற்றும் கலைஞர்கள் ஒன்றிணைந்து இன்று (27) கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்த போராட்டத்துடன் கண்டன பேரணி ஒன்றையும் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையத்தின் இணை ஏற்பாட்டாளர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.