Thursday, January 30, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇறைவரித் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக மனு தாக்கல்

இறைவரித் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக மனு தாக்கல்

அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணானது என அறிவிக்குமாறு கோரி உயர் நீதிமன்றில் மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

ஆடைத்தொழிற்சாலை ஒன்றின் பொது முகாமையாளராக பணிபுரியும் ஹோமாகம பிரதேசத்தை சேர்ந்த யு.எஸ்.ரணவீர என்பவரே இந்த மனுவை சமர்ப்பித்துள்ளார்.

இந்த மனுவில் சட்டமா அதிபர் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ளார்.

தாம் வரி செலுத்துபவர் எனவும், அரசாங்கம் உள்நாட்டு இறைவரி திருத்தச் சட்டமூலத்தை இம்மாதம் 21 ஆம் திகதி நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கியுள்ளதாகவும் மனுதாரர் தெரிவித்துள்ளார்.

உத்தேச சட்டமூலத்தின் மூலம் ஒருவரின் மாதாந்த வரிக்கு உட்பட்ட வருமான வரம்பு இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாவிலிருந்து ஒரு இலட்சமாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுமக்கள் மீது செலுத்த முடியாத வரிச்சுமை சுமத்தப்பட்டு, பொதுமக்கள் கடும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாக நேரிடும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles