இலங்கையில் இவ்வருடம் செப்டெம்பர் 30ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 435 கொலைகள் இடம்பெற்றுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
கடந்த 2021ஆம் ஆண்டு இலங்கையில் 521 கொலைகள் இடம்பெற்றுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (26) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.