Sunday, February 22, 2026
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுரூபவாஹினி கூட்டுத்தாபனம் விற்கப்படாது

ரூபவாஹினி கூட்டுத்தாபனம் விற்கப்படாது

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் விற்கப்பட மாட்டாது என அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ரூபவாஹினியில் தற்போது பணியாளர்கள் அதிகமாக உள்ளதாகவும், நிறுவனம் ஒரு பில்லியன் ரூபா கடனாகப் பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.

வங்கி வட்டி விகிதங்கள் அதிகரித்துள்ளதால் வாங்கிய கடனுக்கு அதிக வட்டி செலுத்த வேண்டியுள்ளதால் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அதன்படி, கடன் சுமையைக் குறைக்கும் வகையில், தொலைக்காட்சி நிலையத்தின் 100 பயன்படுத்தப்படாத சொத்துக்கள் அரசாங்கத்திற்கு வழங்கப்படும் என்றும், அதன் அடிப்படையில் நிறுவனத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles