மருந்தகங்களில் காலாவதியான மருந்துகள் அதிகளவில் இருப்பதாக அகில இலங்கை மருந்தக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இவ்வாறான மருந்துகளின் அடையாளங்களை மாற்றி சந்தையில் விற்பனை செய்யப்படும் மோசடி ஒன்று இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, இந்திய கடன் திட்டத்தின் கீழ் தட்டுப்பாடுள்ள மருந்துகளை உடனடியாக இறக்குமதி செய்யுமாறு ஜனாதிபதி சுகாதார அமைச்சருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.