மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய இலங்கையின் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அனுமதி வழங்க அனுமதிக்க அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.
அதன்படி, இரு சக்கர மின்சார வாகனம் அதிகபட்சமாக 25,000 அமெரிக்க டொலர்களுக்கும், 4 சக்கர மின்சார வாகனம் அதிகபட்சமாக 65,000 அமெரிக்க டொலர்களுக்கு உட்பட்டு இறக்குமதி செய்ய வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.
இலங்கைக்கு அனுப்பப்படும் அந்நியச் செலாவணி மதிப்பில் 50%க்கு ஏற்ப மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.