யால பூங்காவில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பாதுகாப்பு தரப்பினருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
அரசியல் செல்வாக்கின்றி சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.