சவாலான காலத்திற்கு மத்தியில் நாட்டில் வீதிகள் மற்றும் கட்டிடங்களை நிர்மாணிப்பதற்கான மாற்று வழிகள் இருந்தபோதிலும்இ சுகாதாரத் துறைக்கு மாற்று வழிகள் இல்லை என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
சுகாதாரத்துறை மிக முக்கியமான துறைகளில் ஒன்றாக இருப்பதால், சேவையின் உயர்மட்டத்திலிருந்து அடிமட்டம் வரை உள்ள அனைத்து நபர்களின் உறுதியும் அர்ப்பணிப்பும் உயிர்களின் பாதுகாப்பை உறுதி செய்கிறது.
அரச தாதியர் சங்கத்தின் நிகழ்வொன்றின் போதே சுகாதார அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சுகாதாரம் என்பது பெரும் பொறுப்புடன் கூடிய ஒரு துறையாகும்.கடமைகளை நிறைவேற்றுவதில் மனதின் தெளிவு முக்கியமானது என்றும், அதேசமயம் சகாக்கள் மத்தியில் ஒற்றுமையும் சகோதரத்துவமும் முக்கியம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
சுகாதார சேவை ஒரு முக்கியமான சேவையாக இருப்பதால் அனைத்து பங்குதாரர்களும் தங்களால் இயன்ற பங்களிப்பை வழங்க வேண்டும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.