பாணந்துறை – ஹோரத்துடுவ பகுதியில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபானங்களுடன் 03 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாணந்துறை – ஹோரத்துடுவ பகுதியைச் சேர்ந்த மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள் பாணந்துறை – ஹிரண பகுதியில் சட்டவிரோதமான முறையில் மதுபானம் காய்ச்சி விற்பனையில் ஈடுபடுபவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் பாணந்துறை நீதிமன்றில் இன்று(26) ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.