இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் குறித்து நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தும் திறன் அரசாங்கத்திற்கு இல்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட அவர், புதிய அரசியலமைப்பு திருத்தத்தின் பிரகாரம் இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்றத்தில் இருக்க முடியாது என குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்தில் இரட்டைக் குடியுரிமை உள்ளவர்களை நீதித்துறையின் மூலம் கண்டுபிடிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் அவருக்கு இரட்டைக் குடியுரிமை இல்லை எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.