Saturday, November 16, 2024
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவரி திருத்தம் கோரும் மருத்துவ சங்கம்

வரி திருத்தம் கோரும் மருத்துவ சங்கம்

அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதன் மூலம், நாட்டிலிருந்து தொழில் வல்லுநர்களின் இடம்பெயர்வு அதிகரித்துள்ளது.

அத்துடன் சுகாதாரம் மற்றும் பிற துறைகளை பாரிய பள்ளத்தில் தள்ளக்கூடும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள சங்கத்தின் செயலாளர் மருத்துவ கலாநிதி ஹரித அலுத்கே, வரிக் கொள்கையில் திருத்தங்களை சமர்ப்பிக்கும் பாரிய பொறுப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கட்சித் தலைவர்களுக்கும் உண்டு என்று குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கை மற்றும் நிபந்தனைகளின்படி வரிக் கொள்கைகள் செயல்படுத்தப்பட்டன என்பது தெளிவாக உள்ளது. இதில் மறைக்க எதுவும் இல்லை.

சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளின் அழுத்தம் காரணமாகவே இந்த வகையான வரிக் கொள்கைகளை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது.

இந்த வரிக் கொள்கைகளின் விளைவாகஇ தொழில் வல்லுநர்களைப் பற்றிய அறிவு இல்லாத கற்காலத்திற்கு நாடு செல்கிறது. பல மருத்துவர்கள்இ கணக்காளர்கள்இ பொறியாளர்கள் எனப் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.

இதனால்இ பெரும்பாலான மருத்துவமனைகள் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles