யால சரணாலயத்தில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய சம்பவம் தொடர்பில் நிலைமையைக் கட்டுப்படுத்தத் தவறிய அதிகாரிகளின் சேவைகள் விசாரணைகள் முடியும் வரை இடைநிறுத்தப்படவுள்ளனர் என வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சந்திர ஹேரத் தெரிவித்துள்ளார்.
குறித்த குழுவுடன் பயணித்த வழிகாட்டிகளின் சேவையும் தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளனர் என அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், சம்பவத்துடன் தொடர்புடைய 7 சபாரி வழிகாட்டிகளின் சேவையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை யால சரணாலயத்தில் சட்டவிரோதமாக வன விலங்குகளை துன்புறுத்தும் நபர்களை கைது செய்யுமாறு பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் அனுப்புமாறு வனஜீவராசிகள் அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.