Monday, December 29, 2025
29.5 C
Colombo
செய்திகள்உலகம்பிரித்தானிய பிரதமராகிறார் ரிஷி சுனக்

பிரித்தானிய பிரதமராகிறார் ரிஷி சுனக்

இங்கிலாந்தின் புதிய பிரதமராக பதவியேற்கவுள்ள ரிஷி சுனக், நாட்டின் ஆழ்ந்த பொருளாதார சவாலை எதிர்கொள்ள ஒற்றுமைக்கான வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.

புதிய பிரதம மந்திரி பதவிக்கான போட்டியில் வெற்றி பெற்ற பிறகு அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

போட்டியாளரான பென்னி மோர்டான்ட் நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து போதுமான ஆதரவைப் பெறத் தவறியதால் சுனக், கொன்சவேட்டிவ் கட்சியின் தலைமைப் போட்டியில் வெற்றி பெற்றார்.

இந்தநிலையில் தமது முதல் உரையில், தனது கட்சியையும் இங்கிலாந்தையும் ஒன்றாகக் கொண்டுவருவதே தமது முன்னுரிமை என்று கூறினார்.

ரிஷி சுனக் இங்கிலாந்தின் முதல் ஆசியப் பிரதமராகவும், 200 ஆண்டுகளுக்கும் மேலான காலத்தில் இளம் வயது பிரதமராகவும் திகழ்கிறார்.

கடந்த வாரம் பிரதமர் லிஸ் ட்ரஸ் பதவி விலகியமையை அடுத்தே சுனக் பிரதமராக பதவியேற்கிறார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles