குறைந்த எடையுள்ள பாண்களை விற்பனை செய்யும் கடைகளை தேடுமாறு அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அளவீட்டு அலகு தர நிர்ணயம் மற்றும் சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பாண் ராத்தலொன்றுக்கு சரியான எடை இல்லை என கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, நுகர்வோர் விவகார அதிகாரசபை பல்வேறு பகுதிகளில் குறைந்த எடை கொண்ட பாண்களை விற்கும் கடைகளில் சோதனை நடத்தியது.
இதன்போது தரம் குறைந்த எடையுள்ள பாண் விற்பனை செய்த பல வியாபாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.