கடுமையான மருந்து தட்டுப்பாட்டால் அவதியுறும் லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு பல நிறுவனங்கள் மருந்துகளை வழங்க மறுத்துள்ளதாக தேசிய நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மருந்து கொள்வனவு செய்தமைக்காக அந்த நிறுவனங்களுக்கு சுமார் 20 கோடி ரூபா நிலுவைத் தொகை இதுவரை வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக நிலுவைத் தொகை வழங்கப்படும் வரை மீண்டும் மருந்து விநியோகிக்காதிருக்க அந்நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.
தேவைகளுக்கு ஏற்ப கொள்வனவுகளை மேற்கொள்ள சுகாதார அமைச்சு வைத்தியசாலை அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளதாகவும், ஆனால் திறைசேரியானது சுகாதார அமைச்சுக்கு போதியளவு ஒதுக்கீட்டை வழங்காவிடின், அந்த தீர்மானத்தில் அர்த்தமில்லை எனவும் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் சிறுவர் வைத்தியசாலையின் நிலை மேலும் மோசமடைய வாய்ப்பு இருப்பதாக குறிப்பிடப்படுகிறது.