Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உலகம்போட்டியிலிருந்து விலகினார் பொரிஸ் ஜொன்சன்

போட்டியிலிருந்து விலகினார் பொரிஸ் ஜொன்சன்

பிரித்தானிய பிரதமர் பதவிக்குப் போட்டியிடப் போவதில்லை எனமுன்னாள் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் நேற்று (23) அறிவித்துள்ளார்.

தற்போது பிரதமர் பதவி போட்டியில் பங்கேற்பது ஏற்புடையதல்ல என அவர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நேரத்தில், பிரித்தானியா பொதுத் தேர்தலை எதிர்பார்க்கவில்லை, மாறாக மக்கள் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீளவே எதிர்பார்க்கின்றனர் என அவர் கூறியுள்ளார்.

2024ல் கன்சர்வேடிவ் கட்சியை தேர்தல் வெற்றிக்கு அழைத்துச் செல்ல தான் தயாராக இருப்பதாகவும், இந்த நேரத்தில் தனக்கு 102 எம்.பிக்களழனட ஆதரவு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தேசிய நலனுக்கான உடன்பாட்டை எட்டுவதற்காக பென்னி மோர்டென்ட் மற்றும் ரிஷி சுனக் ஆகியோருடன் நேற்று (23) 3 மணி நேரம் கலந்துரையாடப்பட்டது. ஆனால் அது தோல்வியில் முடிந்தது.

அதனால் பிரதமராக பதவியேற்கும் புதிய தலைவருக்கு தான் ஆதரவளிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தேர்தல் தொடர்பான சுரொட்டி ஒட்டினால் 50,000 ரூபா அபராதம்

தேர்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் அபராதம் மற்றும் தண்டனை அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சட்டத்தின் பிரகாரம் தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டி ஒட்டினால் விதிக்கப்படும் 50 ரூபா...

Keep exploring...

Related Articles