கட்டுநாயக்க – ஆண்டியம்பலம் பகுதியில் பொலிஸார் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
உந்துருளியில் பிரவேசித்த இரண்டு சந்தேகநபர்கள் வீதியில் பயணித்த பெண் ஒருவரிடமிருந்து தங்கச்சங்கலியை பறித்து, தப்பிச்செல்ல முற்பட்டுள்ளனர்.
இதன்போது, பொலிஸாரை நோக்கி சந்தேகநபர்கள், துப்பாக்கி சூடு நடத்தியுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து சந்தேகநபர்களை நோக்கி பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 22 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்தார்.
இந்தநிலையில் 25 வயதுடைய மற்றுமொரு சந்தேகநபர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸ் ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.