கம்பஹாவில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றின் பெண்கள் கழிவறையில் இருந்து குறைமாத கரு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த கரு பரிசோதனைக்காக கம்பஹா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கழிவறையை சுத்தம் செய்ய சென்ற துப்புரவு பணியாளர் இந்த கருவை கண்டெடுத்ததாக தகவல் வெளியானது.
அது எப்படி கழிவறைக்குள் சென்றது என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.