அதிகரித்து வரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த வேண்டுமாயின் அரச செலவீனங்கள் குறைக்கப்பட வேண்டும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் கற்கைகள் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.
அவ்வாறு இல்லாத பட்சத்தில் நாட்டின் பொருளாதார நிலை மேலும் வீழ்ச்சியடையலாம் என அவர் குறிப்பிட்டார்.
கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.