உலக கிண்ண 20க்கு 20 கிரிக்கட் போட்டித்தொடரின் இன்று இடம்பெற்ற போட்டி ஒன்றில் பங்களாதேஷ் அணி, நெதர்லாந்து அணியை 9 ஓட்டங்களால் தோல்வியடைச் செய்தது.
போட்டியில் முதலில் துடுப்பாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்களின் முடிவில் 144 ஓட்டங்களை பெற்றது.
இதனையடுத்து துடுப்பாடிய நெதர்லாந்து அணி, 20 ஓவர்களின் முடிவில் 135 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
போட்டியின் சிறப்பாட்டக்காரராக பங்களாதேஷ் அணியின் சார்பில் 25 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுக்களை கைப்பற்றிய தஸ்கின் அஹமட் தெரிவானார்.