நியூயோர்க் சவுத் பீச்சில் உள்ள வாண்டர்பில்ட்டில் முதல் தடவையாக நடைபெற்ற மிஸ் ஸ்ரீலங்கா நியூயோர்க் அழகிப் போட்டியில் சண்டை இடம்பெற்றதாக கூறப்படும் காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.
கடந்த வெள்ளியன்று நடைபெற்ற அழகிப் போட்டியில் 300க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது,
அதில் ஏஞ்சலியா குணசேகர என்பவர் மிஸ் ஸ்ரீலங்கா நியூயார்க்காக முடிசூட்டப்பட்டார்.
சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளி காட்சிகள், போட்டியாளர்கள் உட்பட பல இலங்கையர்கள் சண்டையில் ஈடுபட்டதைக் காட்டியது, இதன் விளைவாக சொத்துக்களுக்கும் சேதம் ஏற்பட்டது.
இந்த மோதல் தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.