சோதனைகளை நடத்துவது பிரச்சினைக்கு தீர்வாகாது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பாண் ராத்தலுக்கு குறிப்பிட்டதொரு எடை இல்லை என கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் இந்த நாட்களில் சோதனைகளை மேற்கொள்ள நுகர்வோர் அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.
குறைந்த எடை கொண்ட பாண்களை விற்பனை செய்த 70க்கும் மேற்பட்ட பேக்கரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
எவ்வாறாயினும், பேக்கரிகளின் பிரச்சினைகளை தீர்க்காமல் சுற்றிவளைப்பு செய்வது அர்த்தமற்றது என அகில இலங்கை பேக்கரிகள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்தார்.