Tuesday, July 29, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசுயாதீன ஆணைக்குழுக்கள் ஒழிக்கப்படும்-விஜயதாச ராஜபக்ஷ

சுயாதீன ஆணைக்குழுக்கள் ஒழிக்கப்படும்-விஜயதாச ராஜபக்ஷ

21 ஆவது அரசியலமைப்பு திருத்தம் நிறைவேற்றப்படுவதன் மூலம் தற்போது இயங்கி வரும் சுயாதீன ஆணைக்குழுக்களின் பதவிக்காலம் முடிவடையும் என நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் அரசியலமைப்பு சபை உறுப்பினர்கள் நியமிக்கப்பட வுள்ளதாகவும், அரசியலமைப்பு சபை நியமனத்தின் பின்னர் இரண்டு வாரங்களுக்குள் சுயாதீன ஆணைக்குழு உறுப்பினர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

தேசிய தேர்தல் ஆணைக்குழு, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, நீதிச் சேவை ஆணைக்குழு, தேசிய பொலிஸ் ஆணைக்குழு, இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு, தேசிய கணக்காய்வு ஆணைக்குழு, பொதுச் சேவை ஆணைக்குழு போன்றவை அதில் அடங்கும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles