இலங்கையில் க்ரிப்டோ நாணயங்களை சட்டப்பூர்வமாக்குவது குறித்து பரிசீலிக்கத் தயார் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஆனால், க்ரிப்டோ நாணயங்களை சட்டப்பூர்வமாக்குவதால் மாத்திரம் நாட்டை முன்னேற்ற முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வெளிநாட்டு முதலீடுகளினாலேயே எந்த ஒரு நாடும் வளர்ச்சியடைந்தது என கூறிய அவர், கடன்களால் அல்ல எனவும் தெரிவித்தார்.
இணையவழி ஊடாக நடைபெற்ற மாநாடொன்றில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.