எதிர்வரும் செவ்வாய்கிழமை சூரிய கிரகணம் தென்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் மற்றும் விண்வெளி விஞ்ஞான பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
ஐரோப்பா, வட ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் ஆசியாவின் மேற்குப் பகுதிகளிலும் இந்த கிரகணம் தென்படும் .
சோலார் ஃபில்டர் இல்லாமலும் சுமார் 30 வினாடிகள் இதை வெறும் கண்களால் பார்ப்பதால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படாது என்றும் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்தார்.
இலங்கையில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு அதாவது 2027 ஆகஸ்ட் 2ஆம் திகதி மீண்டும் சூரிய கிரகணம் தென்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .