Saturday, November 16, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டு100 சிறார்களை பலிகொண்ட சிரப் இலங்கையில் இல்லை

100 சிறார்களை பலிகொண்ட சிரப் இலங்கையில் இல்லை

இந்தோனேசியா மற்றும் காம்பியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 100க்கும் அதிகமான சிறார்களின் உயிர்களை காவுக் கொண்ட சிரப் மற்றும் திரவ மருந்துகள் நாட்டில் பயன்பாட்டில் இல்லை என தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஒளடதங்களை பதிவு செய்யும் போது மருந்து கட்டுப்பாடு அதிகார சபையினால் அமுல்படுத்தப்படும் கடும் சட்டங்களுக்கு மத்தியில் தரங்கூடிய மருந்துகள் மாத்திரமே நாட்டிற்கு இறக்குமதி செய்ய அனுமதி கிடைக்கப்பெறும் என அந்த சங்கத்தின் பொருளாளர் மஞ்சுள ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.

இருமலுக்காக பயன்படுத்தப்பட்ட சிரப் காரணமாக கம்பியாவில் 70 சிறார்கள் உயிரிழந்தனர்.

இதனையடுத்துஇ சிரப் மற்றும் திரவ மருந்துகளை பருகிய இந்தோனேசியாவைச் சேர்ந்த 100க்கும் அதிகமான சிறார்கள் உயிரிழந்தனர்.

சில திரவ மருந்துகளில் சிறுநீரகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்ற இராசயனப் பொருள் அடங்குகின்றமை இந்தோனேசிய அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles