Monday, September 15, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஹம்மர் வாகனம் தொடர்பான விசாரணை சிஐடியிடம் ஒப்படைப்பு

ஹம்மர் வாகனம் தொடர்பான விசாரணை சிஐடியிடம் ஒப்படைப்பு

சர்ச்சைக்குரிய சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட ஹம்மர் வாகனம் தொடர்பான விசாரணைகள் நிதி அமைச்சினால் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவின் ஆலோசனையின் பேரில், சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் விசாரணை நடத்துமாறு பொலிஸ் மா அதிபருக்கு எழுத்துமூலக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி ஹம்மர் சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டு பின்னர் அது பறிமுதல் செய்யப்பட்டது.

இருப்பினும், உயர் சொகுசு வாகனம் பின்னர் ஒரு பொது ஏலத்தில் ஏலம் விடப்பட்டது, அதில் சம்பந்தப்பட்ட SUV இறக்குமதியாளரால் பின்னர் அது கொள்வனவு செய்யப்பட்டது .

முன்னதாக, இந்த முறைகேடு தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு சுங்கப் பணிப்பாளர் நாயகத்திடம் இராஜாங்க அமைச்சர் கோரியிருந்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles