Tuesday, June 23, 2026
24.5 C
Colombo
செய்திகள்உலகம்சீனாவின் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை

சீனாவின் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை

சீனாவின் பாதுகாப்பை பலப்படுத்த அந்த நாட்டு ஜனாதிபதி ஷி ஜின்பிங் தீர்மானித்துள்ளார்.

தேசிய பாதுகாப்பானது நாடொன்றின் முக்கிய அங்கமாகும் என சீன ஜனாதிபதி தெரிவித்தள்ளார்.

நாட்டின் உள்ளக மற்றும் கரையோரங்களில் இராணுவ படையணியினரை அதிகரித்து பாதுகாப்பை விஸ்தரிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சீனா மேற்கொள்ளும் சில தீர்மானங்களினால் தமது நாடுகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என அண்மைய சில நாட்களாக மேற்கத்தைய நாடுகள் கூறி வருகின்றன.

அவ்வாறான பின்னணியில் தமது நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்த சீன ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles