Friday, January 17, 2025
24.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமதுபோதையில் வாகனம் செலுத்திய நபரின் சாரதி அனுமதிப்பத்திரம் வாழ்நாள் முழுவதும் ரத்து

மதுபோதையில் வாகனம் செலுத்திய நபரின் சாரதி அனுமதிப்பத்திரம் வாழ்நாள் முழுவதும் ரத்து

மதுபோதையில் வாகனம் செலுத்தியதன் மூலம் 36 வயதுடைய பெண்ணொருவருக்கு மரணத்தை ஏற்படுத்தியமை உள்ளிட்ட 6 குற்றச்சாட்டுக்களில் குற்றத்தை ஒப்புக்கொண்ட இளைஞனின் சாரதி அனுமதிப்பத்திரத்தை வாழ்நாள் முழுவதும் இரத்துச் செய்யுமாறு நீர்கொழும்பு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பான வழக்கு நேற்று நீர்கொழும்பு நீதவான் சம்பிக ராஜபக்ஷ முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதுடன், சந்தேகநபருக்கு 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 மாத சிறைத்தண்டனையும் ஐம்பதாயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது.

உயிரிழந்த பெண்ணின் தாய், தந்தை மற்றும் கணவர் ஆகியோருக்கு 2 இலட்சம் ரூபா நட்டஈடு வழங்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இரத்தினபுரி பிரதேசத்தை சேர்ந்த 20 வயதுடைய இளைஞரே இவ்வாறு தண்டனை பெற்றுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles