கடந்த 03 மாதங்களில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நிதி முகாமைத்துவம், வினைத்திறன் மற்றும் விலைத் திருத்தம் ஆகியவற்றின் மூலம் இலாபகரமான நிலையை எட்டியுள்ளது.
நாடாளுமன்றத்தில் வைத்து நேற்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இதனைத் தெரிவித்தார்.
அதன்படி, கடந்த ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் கூட்டுத்தாபனம் தொடர்ந்து இலாபத்தைப் பதிவு செய்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
ஜூலை மாதம் இலாபம் 6,314 மில்லியன்
ஆகஸ்ட் மாதம் இலாபம் 1,775 மில்லியன்
செப்டம்பர் மாதம் இலாபம் 5,600 மில்லியன்