Friday, September 20, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமக்களின் வருமானத்தில் 75% உணவுக்காகச் செலவிடப்படுகிறது

மக்களின் வருமானத்தில் 75% உணவுக்காகச் செலவிடப்படுகிறது

நாட்டு மக்களின் வருமானத்தில் 75% உணவுக்காகச் செலவிடப்படுவதாகப் பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பான குறுகிய மற்றும் நடுத்தர வேலைத்திட்டங்களை அடையாளம் காணும் தேசிய சபையின் உபகுழு தெரிவித்துள்ளது.

நாட்டின் மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மட்டுமே சரியான ஊட்டச்சத்துள்ள உணவைப் பெறுகிறார்கள் என அக்குழு தெரிவித்துள்ளது.

குறித்த குழு நேற்று (18) நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையில் கூடியது

உணவு பாதுகாப்பு, ஊட்டச்சத்து பாதுகாப்பு, உரங்களின் தேவை, விளைச்சல் குறைவு மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடு போன்ற விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

சுமார் பத்து வருடங்களாக நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியுடன் போசாக்குக் குறைபாடு நிலவி வருவதால் அவற்றை இல்லாமல் செய்யத் தேவையான வேலைத் திட்டங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் வருமானம் மற்றும் வீட்டுச் செலவுகள் தொடர்பில் உடனடியாக கணக்கெடுப்பை
மேற்கொள்ளுமாறு பாட்டலி சம்பிக்க ரணவக்க MP நிதி அமைச்சுக்கு அறிவித்துள்ளார்.

நாட்டில் வரி அதிகரிப்பு போன்ற நடவடிக்கைகளின் மூலம் வருமானம் அதிகரித்த போதிலும், கைத்தொழில்களை நிலைநிறுத்துவதில் சிக்கல் தொடர்பில் பேசப்பட்டுள்ளது.
மேலும் வேலையிழப்பு, போசாக்கு நிலைமைகள் வீழ்ச்சி போன்ற பக்கவிளைவுகள் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளமை குறித்துக் கலந்துரையாடப்பட்டுள்ளது

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles