இலங்கையில் பொருளாதார நெருக்கடியானது அதிகரித்தால், அல்லது பொருளாதார நெருடிக்கடியானது நீண்டகாலத்திற்கு நீடித்தால் இலங்கை பாரிய சவால்களை எதிர்நோக்க நேரிடும் என பிட்ச் (Fitch Rating) தரப்படுத்தல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிட்ச் (Fitch Rating) தரப்படுத்தல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடியினால் நுகர்வு பொருட்கள், சில்லறை வர்த்தகம், மின் உற்பத்தி, கட்டிட துறை பாதிக்கும் சாத்தியம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பணவீக்கமானது அனைத்து துறைகளின் இலாபத்தை பாதிக்கும் என்பதோடு, இறக்குமதி தடையானது சீரான பொருளாதார செயல்பாடுகளுக்கு இடையூராக காணப்படும்.
மேலும் உயர் வட்டி வீதமானது கூட்டுறவு வர்த்தகத்தை வெகுவாக பாதிக்கும் எனவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.