Friday, September 20, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபுதிய அரிசி மாஃபியா குறித்து எச்சரிக்கை

புதிய அரிசி மாஃபியா குறித்து எச்சரிக்கை

நாட்டில் தற்போது அரிசி தேவையான அளவு உள்ளதாகவும், உள்நாட்டு அரிசியுடன் இறக்குமதி செய்யப்பட்ட அரசி கலந்து சந்தைக்கு விநியோகிக்கும் மாஃபியா ஒன்று செயற்படுவதாகவும் சிறு மற்றும் நடுத்தர நெல் ஆலை உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

நொச்சியாகம பகுதியில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைத்த அந்த சங்கத்தின் தலைவர் யூ.கே. சேமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது தேவைக்கு அதிகமாக அரிசி உள்ளது. கடந்த காலங்களில் அதிகளவான அரிசி தொகை நாட்டுக்கு இறக்குமதி செய்யபட்டுள்ளது. சில நெல் ஆலை உரிமையாளர்கள் உள்நாட்டு அரிசியுடன் இறக்குமதி செய்யப்பட்ட அரிசையை கலந்து சந்தைக்கு விநியோகம் செய்கின்றனர்.

இது எமக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஏனெனில், உள்நாட்டு நெல்லின் ஊடாக உற்பத்தி செய்யப்படும் அரிசி 200 ரூபா முதல் 210 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுகின்றது.

இந்த நிலையில், சில நெல் ஆலை உரிமையாளர் உள்நாட்டு அரிசியுடன் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அரிசியை கலந்து 160 ரூபா முதல் 170 விற்பனை செய்யப்படுகின்றது.

சில நெல் ஆலை உரிமையாளர்கள் இலாபம் பெற்றுக்கொள்ளும் நோக்கில் உள்நாட்டு அரிசியையும் இறக்குமதி செய்யப்பட்ட அரிசியையும் கலந்து சந்தைக்கு விநியோகிகப்பதாக சிறு மற்றும் நடுத்தர நெல் ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் யூ.கே. சேமசிங்க தெரிவித்துள்ளார்.

ஆகையால், சிறு மற்றும் நடுத்தர நெல் ஆலை உரிமையாளர் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles