இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் வீரர் துஷ்மந்த சமீர, 2022 இருபதுக்கு20 உலகக் கிண்ணத் தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.
அவரது கணுக்காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அவரால் இந்த தொடரில் விளையாட முடியாது என்று தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய அரபு இராச்சியம் – இலங்கை அணிகளுக்கு இடையிலான நேற்றைய போட்டியில் சிறப்பாக பந்துவீசிய துஷ்மந்த சமீர இடைநடுவே உபாதைக்கு உள்ளானார்.
அதேவேளை பிரமோத் மதுசான் மற்றும் தனுஸ்க குணதிலக ஆகியோரின் உடல்நிலையும் இன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது.